முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் இப்போது நடித்து வரும் படம் ‘ராதே ஷ்யாம்’. இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பிரபாஸின் 21-வது படத்தை இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கவுள்ளார். சமீபத்தில், பிரபாஸின் கால்ஷீட் டைரியில் ஒரு புதிய படம் இணைந்தது.
‘ஆதிபுருஷ்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படம் நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்கவுள்ளாராம். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் நடிக்க உள்ளார். தற்போது, இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகவிருக்கிறது. இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் துவங்கவுள்ளனர். படத்தை 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகப்போவது குறிப்பிடத்தக்கது.