இந்த லாக்டோன் தொடங்கியது முதலே பிரபல நடிகர்களின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வருவது அதிகமாகி வருகிறது.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக போலீஸ் அவசர உதவி நிலையத்திற்கு ஒரு போன் கால் வந்தது, இதை தொடர்ந்து போலீஸ் அவசரஅவசரமாக ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்றார்கள். பிறகு அது ஒரு ஃபேக் போன் கால் என்று தெரியவந்தது.
இதைப் போலவே சமீபத்தில் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு போன்கால் போலீசுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். இவருக்கு விழுப்புரத்தில் இருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர் தான் இந்த ஃபேக் போன்காலை செய்துள்ளார் என்பதை கண்டறிந்த போலீசார் அவரை எச்சரித்து விட்டார்கள்.
இதைப் போல தற்போது நடிகர் அஜித் இல்லத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் நிலையத்திற்கு வந்த போன் காலை அடுத்து போலீசார் அஜித் வீட்டிற்கு விரைந்தார்கள். பல மணி நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு ஏதும் தென்படாததால் போலீசார் யார் இந்த ஃபேக் போன்கால் செய்தது என்பதை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
நடிகர் அஜித் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது இது முதல் முறை அல்ல 2014ஆம் ஆண்டு அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக அவர் இல்லத்திற்கு வந்த போன் காலை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல 2017ஆம் ஆண்டு மீண்டும் அவரது இல்லத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த போன் காலை அடுத்து போலீசார் பல மணி நேரம் சோதனை செய்தார்கள் பின்பு அது ஃபேக் போன்கால் என்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது அஜித் எச்.வினோத் இயக்கத்தில் “வலிமை” படத்தில் நடித்துவருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.