சூர்யா அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் – விரைந்த போலீஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாவதற்கு தயாராக உள்ளது. மேலும் சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிப்பதற்கு அடுத்து ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் கால் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து மோப்ப நாயோடு அங்கு விரைந்த போலீஸார் இது வெறும் பொய்யான கால் என்பதை உறுதி செய்த பின் திரும்பியுள்ளார்கள்.

இருப்பினும் சூர்யா சில நாட்களுக்கு முன்பே இந்த அலுவலகத்தை காலி செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக மத்திய மற்றும் மாநில அரசின் கல்வித் திட்டங்களுக்கு எதிரான கருத்துக்களை சூர்யா பதிவிட்டு வருகிறார். இதனால் இந்த வெடிகுண்டு மிரட்டலுக்கும் அரசியலுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share.