அஜித் பட ரீமேக் உரிமையை பெற்ற போனிகபூர்!

  • July 21, 2020 / 10:45 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் “நேர்கொண்டபார்வை” படத்தில் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் வினோத் இயக்கத்திலேயே “வலிமை” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதற்கான செய்தி இன்னும் வெளிவரவில்லை.

தற்போது போனிகபூர் அஜித்தின் பழைய படங்களின் ரீமேக் உரிமையை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே எஸ்ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான அஜித்தின் “வாலி” படத்தின் ரீமேக் உரிமையை போனிகபூர் பெற்றுள்ள நிலையில், தற்போது மீண்டும் வேறொரு படத்தின் உரிமையையும் பெற்றுள்ளாராம்.

தற்போது அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான “வரலாறு” படத்தின் ரீமேக் உரிமையையும் போனிகபூர் பெற்றுள்ளாராம்.இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருப்பார்.

அஜித் படங்களின் ரீமேக் உரிமையை பெற்று தனது மகனை அறிமுகம் செய்யும்போது, இந்த வெற்றி பெற்ற கதைகளில் நடிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார் போனிகபூர் என்று செய்தி வெளிவந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus