வேற லெவல் ப்ரோமோஷன் செய்யும் போனி கபூர் !

  • December 28, 2022 / 06:59 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

2023 -ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறார் . இந்நிலையில் துணிவு படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் .

இந்நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி துணிவு படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது என்றும் இதை விளம்பரப்படுத்த உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் துணிவு படத்தின் ட்ரைலரை திரையிட போனி கபூர் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது . இதனால் துணிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus