இது உண்மை இல்லை – போனி கபூர்

  • January 4, 2023 / 12:09 PM IST

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் . இவர் இயக்கிய கோமாளி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ஜெயம் ரவி , காஜல் அகர்வால் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார் .

கோமாளி படத்திற்கு பிறகு இவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே . இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனே நாயகனாக நடித்து இருக்கிறார் . மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது . சத்யராஜ் , ராதிகா உள்ளிட்டோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் . லவ் டுடே படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பெரிய வெற்றிபெற்றது .

லவ் டுடே படம் ஹிந்தி மொழியில் ரீமேக் ஆக உள்ளது என்றும் அதில் வருண் தவான் நடிக்க உள்ளார் என்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை ஹிந்தியில் தயாரிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது

தற்போது இது பற்றி போனி கபூர் விளக்கமளித்துள்ளார் அதில் ” லவ் டுடே’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் உண்மைக்கு புறம்பானது. இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus