அடேங்கப்பா… 3 நாட்களில் ‘பிரம்மாஸ்திரா : முதலாம் பாகம் – ஷிவா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • September 12, 2022 / 07:24 PM IST

பாலிவுட்டில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அயன் முகர்ஜி. இவர் இயக்கிய புதிய படமான ‘பிரம்மாஸ்திரா’ (முதலாம் பாகம் : ஷிவா) கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மௌனி ராய், டிம்பிள் கபாடியா மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ப்ரிதம் இசையமைத்திருந்தார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.226.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus