ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் கார்த்தி பாடி உள்ள பாடல் வெளியானது !!
October 10, 2022 / 11:14 PM IST
|Follow Us
நடிகர் கார்த்தி தற்பொழுது சர்தார் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் .இந்த படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடித்து உள்ளார் . மேலும் நடிகை லைலா நீண்ட வருடங்களுக்கு இந்த படத்தில் நடித்து உள்ளார் . இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து உள்ளார் . அதில் ஒன்றில் வயதான தோற்றத்தில் நடித்து உள்ளார் . இந்த படம் வருகின்ற 21 -ஆம் தேதி வெளியாக உள்ளது .
இந்த படத்தின் சில காட்சிகள் அசர்பைசான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது . இதில் சங்கி பாண்டே சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதுவரை படப்பிடிப்பு நடக்காத அசர்பைசான் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பு நடந்தது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூ.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது .
சர்தார் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .இயக்குனர் ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் கார்த்தி இந்த பாடலை பாடியுள்ளார் .