போடுடா வெடிய …ஆரம்பமாகும் புதுப்பேட்டை 2 !!

  • October 3, 2022 / 01:31 AM IST

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் திருச்சிற்றம்பலம் . இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 100 கோடி வசூல் செய்து சாதனை புரிந்து உள்ளது .

திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து இருந்தார் தனுஷ் . இந்த படம் செப்டம்பர் 29 அன்று திரையரங்கில் வெளியானது .யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் , இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . கலைப்புலி.எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து இருந்தார் .

செல்வராகவன் மற்றும் தனுஷ் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்து பணியாற்றிய படம் என்பதால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது . படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும்பாலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் புதிய படம் வெளியாக உள்ளது என்றும் அந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிக்க இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அந்த படம் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது . இதனால் புதுப்பேட்டை படத்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus