நடன இயக்குனர் பிருந்தா வெளியிட்டுள்ள திரிஷாவின் புகைப்படம்!

  • July 16, 2020 / 10:16 PM IST

நடன இயக்குனர் பிருந்தா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தன் திரையுலக பயணத்தில் பல பிரபலங்களுடன் தனக்கு கிடைத்த அனுபவம் பற்றி தனித்தனியாக புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களை பற்றியும் அந்த திரைப்பட அனுபவங்கள் பற்றியும் தனது ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.

அவர் நடிகர் அஜீத், சூப்பர் ஸ்டாரின் காலா படப்பிடிப்பு, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் பேட்மேன் திரைப்படத்தில் கிடைத்த அனுபவம், விக்ரம் நடிப்பில் ராவணன் திரைப்படம், விஜய் நடிப்பில் சர்க்கார் திரைப்படம், கமலஹாசனின் நம்மவர் திரைப்படத்தில் கிடைத்த அனுபவம், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோனி திரைப்படம் என்று பல அனுபவங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்த வரிசையில் தற்போது அவர் நடிகை திரிஷா உடனான தனது அனுபவம் பற்றி குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டு, “திரிஷா. இவருடன் நான் பல மொழிகளில் பல படங்களில் பணி புரிந்திருக்கிறேன். இவர் இயற்கையிலேயே நல்ல கலைஞர் மற்றும் நல்ல மனதுடையவர். நான் இவரை சந்தித்த நாளிலிருந்து இன்றுவரை அவர் என்றும் மாறாமல் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார். லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். துல்கர் சல்மான், காஜல்அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோரின் நடிப்பில் “ஏ பிராமிக்” என்ற படத்தை இவர்தான் இயக்குகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus