இவ்விரண்டு புகைப்படங்களிலும் இருக்கும் நடிகை யார் தெரியுமா?
November 23, 2022 / 11:00 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். அறிமுகமான முதல் தமிழ் படத்தில் சின்ன ரோலில் தான் நடித்திருந்தார் ஸ்ரேயா. அந்த படம் தான் ‘எனக்கு 20 உனக்கு 18’. அதன் பிறகு ‘மழை’ என்ற படத்தில் ஸ்ரேயாவை கதையின் நாயகியாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா.
‘மழை’ ஹிட்டானதும் நடிகை ஸ்ரேயா சரணுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு, ரௌத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன், RRR’ என படங்கள் குவிந்தது.
ஸ்ரேயா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2018-ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரேயா சரண். சமீபத்தில், ஆண்ட்ரே கோஸ்சீவ் – ஸ்ரேயா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இப்போது, ஸ்ரேயா சரண் நடிப்பில் ‘மியூசிக் ஸ்கூல்’ (ஹிந்தி / தெலுங்கு), தமிழில் ‘சண்டக்காரி, நரகாசூரன்’, கன்னடத்தில் ‘கப்ஜா’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஸ்ரேயாவின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம ஸ்ரேயாவா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus