இந்த புகைப்படத்தில் இருக்கும் ‘பிக் பாஸ்’ நடிகை யார் தெரியுமா?
August 29, 2023 / 01:20 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ‘காலா, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, டெடி, அரண்மனை 3, சிண்ட்ரெல்லா, பஹீரா’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
சாக்ஷி அகர்வால் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
மேலும், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். இப்போது சாக்ஷி அகர்வால் நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள், புரவி, கெஸ்ட் : சேப்டர் 2, குறுக்கு வழி’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவரின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்லை பார்த்த ரசிகர்கள் நம்ம சாக்ஷியா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus