சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கு அமைந்த முதல் படமே நிவின் பாலியுடன் தான். அது தான் மலையாள படமான ‘ப்ரேமம்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த இந்த படம் மெகா ஹிட்டானது. இதில் சாய் பல்லவியின் நடிப்பு அவருக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.
இந்த படத்துக்கு பிறகு நடிகை சாய் பல்லவிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் மலையாளத்தில் ‘கலி, அதிரன்’, தெலுங்கில் ‘ஃபிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, படி படி லேச்சே மனசு, லவ் ஸ்டோரி, விரத பர்வம், ஷ்யாம் சிங்க ராய்’, தமிழில் ‘தியா, மாரி 2, NGK, பாவக் கதைகள், கார்கி’ என படங்கள் குவிந்தது.
இப்போது சாய் பல்லவி கைவசம் ஒரு தமிழ் படம் மட்டும் இருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார்.
இந்நிலையில், சாய் பல்லவியின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம சாய் பல்லவியா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.