சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மனிஷா யாதவ். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘வழக்கு எண் : 18/9’. பாப்புலர் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் மனிஷா யாதவ்வின் நடிப்பு அனைவரையும் லைக்ஸ் போட வைத்தது.
‘வழக்கு எண் : 18/9’ படத்துக்கு பிறகு நடிகை மனிஷா யாதவ்வுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பைக் கதை, சண்டிமுனி’ என படங்கள் குவிந்தது.
மனிஷா யாதவ் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் ஒரு படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். பின், இவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது, மனிஷா யாதவ்வின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம மனிஷாவா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.