சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியாமணி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கத்தில் தான். அது தான் ‘கண்களால் கைது செய்’. இந்த படத்துக்கு பிறகு நடிகை ப்ரியாமணிக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அது ஒரு கனாக்காலம், மது, பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா, கஸ்டடி, ஜவான்’ என படங்கள் குவிந்தது. ப்ரியாமணி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
2017-ஆம் ஆண்டு முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ப்ரியாமணி. தற்போது, ப்ரியாமணியின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்லை பார்த்த ரசிகர்கள் நம்ம ப்ரியாமணியா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.