பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் க்ரித்தி சனோன். இவர் ஹீரோயினாக அறிமுகமான முதல் படமே தெலுங்கு மொழியில் தான். ‘1:நேநொக்கடைன்’ என்ற இந்த படத்தில் ஹீரோவாக தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு நடித்திருந்தார்.
இந்த படத்துக்கு பிறகு ‘ஹீரோபந்தி’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார். அதன் பிறகு க்ரித்தி சனோனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்கள் குவிந்தது.
க்ரித்தி சனோன் நடித்து கடந்த ஆண்டு (2023) ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸான படம் ‘ஆதிபுருஷ்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியிருந்தார்.
இப்போது க்ரித்தி சனோன் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவரின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம க்ரித்தியா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.