சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சாய் தன்ஷிகா. ‘மனதோடு மழைக்காலம், மறந்தேன் மெய்மறந்தேன், திருடி’ போன்ற சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சாய் தன்ஷிகா ஹீரோயினாக அறிமுகமானது கன்னட மொழியில் வெளியான ‘கெம்பா’ என்ற படத்தில் தான்.
அதன் பிறகு தமிழில் ‘பேராண்மை’ என்ற படம் சாய் தன்ஷிகாவின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. ‘பேராண்மை’ படத்துக்கு பிறகு சாய் தன்ஷிகாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி, யாயா, திறந்திடு சீசே, கபாலி, எங்க அம்மா ராணி, உரு, சோலோ, விழித்திரு, காத்தாடி, காலக்கூத்து, இருட்டு, லாபம்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
நடிகை சாய் தன்ஷிகா கன்னடம் மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, இவரின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம தன்ஷிகாவா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.