இந்த புகைப்படங்களில் இருக்கும் சமுத்திரக்கனி பட ஹீரோயின் யார் தெரியுமா?

  • February 13, 2024 / 08:05 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சுனைனா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘காதலில் விழுந்தேன்’. அதற்கு மிக முக்கிய காரணம் அப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டாகி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தது. ‘காதலில் விழுந்தேன்’ படத்துக்கு பிறகு நடிகை சுனைனாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம், நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக் கருப்பட்டி, ட்ரிப், ரெஜினா’ என படங்கள் குவிந்தது.

நடிகை சுனைனா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, இவரின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம சுனைனாவா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus