சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். பாப்புலர் ஹீரோ சரத்குமாரின் மகளாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சிலம்பரசனுடன் தான்.
அது தான் ‘போடா போடி’. அந்த படத்துக்கு பிறகு நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, Mr. சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி, இரவின் நிழல், காட்டேரி, யசோதா, மைக்கேல், கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என படங்கள் குவிந்தது.
வரலக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, இவரின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம வரலக்ஷ்மியா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.