இந்த புகைப்படங்களில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா பட ஹீரோயின் யார் தெரியுமா?

  • September 21, 2023 / 11:31 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளர், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் நடிகை என வலம் வந்தவரை ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. அது தான் ‘மேயாத மான்’. ‘மேயாத மான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து ‘கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா : அத்தியாயம் ஒன்று, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஹாஸ்டல், குருதி ஆட்டம், யானை, திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை’ ஆகிய படங்களிலும், ‘டைம் என்ன பாஸ், விக்டிம்’ ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இப்போது நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, அருள்நிதியின் ‘டிமான்ட்டி காலனி 2’ உட்பட ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவரின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம ப்ரியா பவானி ஷங்கரா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus