இந்த புகைப்படங்களில் இருக்கும் விஜய் பட ஹீரோயின் யார் தெரியுமா?
July 31, 2023 / 08:04 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டேவுக்கு முதல் பட வாய்ப்பு அமைந்ததே தமிழ் சினிமாவில் தான். அது தான் ‘முகமூடி’. இந்த படம் ஹிட் ஆகாமல் போனதால் பூஜா ஹெக்டேவின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் எதுவும் இணையவில்லை.
ஆனால், பூஜா ஹெக்டேவுக்கு படங்களை அடுத்தடுத்து கொடுத்து அவரை ஹீரோயினாக வலம் வர வைத்து அழகு பார்த்தது ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமா. இப்படி அடித்த ஜாக்பாட்டில் தெலுங்கில் ‘ஒக்க லைலா கோஷம், முகுந்தா, துவ்வாட ஜெகன்னாதம், சாக்ஷ்யம், அரவிந்த சமீதா வீர ராகவா, மகர்ஷி, கட்டாலகொண்டா கணேஷ், அல வைகுந்தபுரமுலோ, மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர், ராதே ஷ்யாம்’ மற்றும் ஹிந்தியில் ‘மொகெஞ்ச தாரோ, ஹவுஸ்ஃபுல் 4’ என படங்கள் குவிந்தது.
கடந்த ஆண்டு (2022) பூஜா ஹெக்டே நடித்து தமிழில் ரிலீஸான படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தில் ஹீரோவாக ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். தற்போது, பூஜா ஹெக்டேவின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம பூஜா ஹெக்டேவா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus