சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் அசின். இவர் தமிழில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘M.குமரன் S/O மகாலக்ஷ்மி’. இந்த படத்தில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார்.
இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை அசினுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், தசாவதாரம், காவலன்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
அசின் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2016-ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அசின். ராகுல் ஷர்மா – அசின் தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
தற்போது, அசினின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம அசினா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.