தெலுங்கு சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் டிம்பிள் ஹயாத்தி. இவர் தமிழில் ‘தேவி 2’ மற்றும் ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.
‘வீரமே வாகை சூடும்’ படத்தில் பிரபல நடிகர் விஷால் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் டிம்பிள் ஹயாத்தி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
டிம்பிள் ஹயாத்தி நடித்து சமீபத்தில் ரிலீஸான தெலுங்கு படம் ‘ராமபாணம்’. இதில் கதாநாயகனாக கோபிசந்த் நடித்திருந்தார். இந்நிலையில், டிம்பிள் ஹயாத்தியின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம டிம்பிள் ஹயாத்தியா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.