சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மிருணாளினி ரவி. இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த படத்தை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார்.
‘சூப்பர் டீலக்ஸ்’-க்கு பிறகு மிருணாளினி ரவிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா’ என தமிழ் படங்கள் குவிந்தது.
மிருணாளினி ரவி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, இவரின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம மிருணாளினியா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.