‘ஜெய் பீம்’ சர்ச்சை… சூர்யா, ஜோதிகா மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த வன்னியர் சங்கம்!

  • November 23, 2021 / 02:08 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘ஜெய் பீம்’, சூர்யாவின் கேரியரில் 39-வது படமாம். இப்படம் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸானது.

சூர்யா வக்கீலாக நடித்திருந்த இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், தமிழ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், இளவரசு, சுஜாதா சிவக்குமார், சிபி தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டிய வண்ணமுள்ளனர்.

1993-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சந்துரு என்பவர் பழங்குடிப் பெண்ணுக்கு போலீஸால் ஏற்படும் ஒரு பிரச்சனைக்காக நடத்திய உண்மையான வழக்கை மையமாக வைத்து தான் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், அமேசான் நிறுவனம் மீது ‘அவதூறு பரப்புதல், இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்’ ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

 

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus