“இப்படி இருந்தால் சூர்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும்”- நடிகை கேத்தரின் தெரசா!
August 20, 2020 / 01:51 PM IST
|Follow Us
தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான கேத்தரின் தெரசா மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களின் மூலம் அறிமுகமாகி பின்பு தமிழ் திரையுலகிற்கு 2014ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான “மெட்ராஸ்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக நடித்திருந்த கேத்தரின் தெரசா தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து கதகலி, கணிதன், கடம்பன், வந்தா ராஜாவா தான் வருவேன், கலகலப்பு-2 போன்ற படங்களில் நடித்த கேத்தரின் தெரசா தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
கடைசியாக இவர் தெலுங்கில் வெளியான “வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்” என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகர் சூர்யாவை சட்டை இல்லாமல் இருக்கும் புகைப்படங்களில் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
தனது சமீபத்திய யூடியூப் நேர்காணல் ஒன்றில் தனது இன்ட்ரஸ்ட் குறித்து பேசியபோது, இந்த குவாரண்டினில் அதிகமாக புக்ஸ் படித்து வருவதாகவும், மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வதற்கு தன்னால் காத்திருக்க முடியவில்லை என்றும், மேலும் நடிகர் சூர்யா சர்ட் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் நடித்திருக்கும் கேத்தரின் தெரேசா இதுவரை நடிகர் சூர்யாவுடன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு இவர் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.