கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றுக்கொண்ட ‘மெட்ராஸ்’ ஹீரோயின் கேத்ரின் திரசா… வைரலாகும் ஸ்டில்ஸ்!
November 18, 2020 / 09:00 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் கேத்ரின் திரசா. தமிழில் அறிமுகமான முதல் படமே கேத்ரின் திரசாவுக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. அது தான் ‘மெட்ராஸ்’. இதில் ஹீரோவாக கார்த்தி நடிக்க, படத்தை பா.இரஞ்சித் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் ‘கலையரசி’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்து அசத்தி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார் கேத்ரின் திரசா. ‘மெட்ராஸ்’ படத்துக்கு பிறகு நடிகை கேத்ரின் திரசாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா 2, அருவம்’ என தமிழில் படங்கள் குவிந்தது.
கேத்ரின் திரசா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றுக் கொண்டு கேத்ரின் திரசா தன் வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு, அதன் ஸ்டில்ஸை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த சேலஞ்சில் நடிகர்கள் சித்தார்த், அதர்வா மற்றும் ஆர்யா ஆகியோரை பங்கேற்க சொல்லியிருக்கிறார் கேத்ரின் திரசா.
Beautiful @CatherineTresa1 accepted the #GreenindiaChallenge from Honorable MP Shri @MPSantoshtrs and planted saplings at her residence in Hyderabad.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.