சமீபத்தில் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் அப்பா-மகன், கொலை வழக்கு. (பென்னீஸ் – ஜெயராஜ்)
போலீசாரால் கைது செய்யப்பட்ட இந்த இருவர் லாக்கப்பில் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இணையதளத்தில் பலரும் இந்தப் பிரச்சினையை சுட்டிக்காட்டி வீடியோக்களை பதிவிட்டார்கள். மேலும் பல சினிமா பிரபலங்களும் இந்த பிரச்சினை குறித்து பேசி இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கினார்கள்.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கு போலீஸிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை ஆரம்பித்த புதிதில் இந்த பிரச்சினை பற்றி பாடகி சுஜித்ரா ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ மூலமாகத்தான் பலருக்கு இந்த பிரச்சினை பற்றி தெரியவந்தது.
தற்போது அவர் வெளியிட்ட அந்த வீடியோவை நீக்கக்கோரி சிபிசிஐடி போலீஸ் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த வீடியோவில் இருக்கும் விஷயங்கள் பலவற்றிற்கு ஆதாரம் இல்லை என்றும் இந்த வீடியோவில் நடந்த சம்பவம் மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டு இந்த வீடியோவை தற்போது நீக்கியுள்ளார்கள்.
இதைப்பற்றி தூத்துக்குடி போலீசார் குறிப்பிட்டுள்ளதாவது” சுஜித்ரா என்பவரால் சாத்தான்குளம் பிரச்சினை பற்றி வெளியான வீடியோ முற்றிலும் உண்மைதன்மையற்றது. மேலும் இதுபோன்ற காணொளிகளை வெளியிடுவது வழக்கின் புலனாய்வை பாதிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே பொதுமக்கள் இத்தகைய காணொளிகளை நம்ப வேண்டாம்” என்றிருக்கிறார்கள்.