சாத்தான்குளம் பிரச்சினை பற்றி பிரபலங்களின் ட்வீட்!

  • July 2, 2020 / 01:42 PM IST

சாத்தான்குளத்தில் சமீபத்தில் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிஸ் ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் காவலர்களால் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு லாக்கப் மரணம் அடைந்தார்கள்.

இந்த பிரச்சனை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல இடங்களில் இந்த அநியாயத்திற்கு நீதி கோரி போராட்டங்கள் வெடித்தன. அதுமட்டுமின்றி இணையதளங்களில் மக்களும் பிரபலங்களும் இவர்களுக்கு நீதிகோரி இந்த பிரச்சனையை பற்றி அறிக்கை விடுக்க தொடங்கினார்கள்.

முதலில் இந்த காவலர்களுக்கு போதுமான தண்டனை வழங்கப்படாத நிலையில், போராட்டங்கள் இன்னும் வலுத்தன. மேலும் இந்த பிரச்சனையை சிபிசிஐடியிடம் மாற்றக்கோரி பலரும் கோரிக்கை விடுத்தார்கள்.

இதைத்தொடர்ந்து அன்றிரவு காவல்நிலையத்தில் நடந்தது என்ன என்பதற்கான சாட்சியளிக்க, அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் ரேவதி தானாகவே முன்வந்தார். மேஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் தலைமையில் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றம் இந்த பிரச்சனைக்கு பக்கபலமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் சாட்சி சொல்லவந்த ரேவதியை பலர் மிரட்ட முயற்சி செய்ததாகவும், பின்பு மேஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சமாதானம் செய்து அவரை வாக்குமூலம் கொடுக்க வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் காவலர் ரேவதிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இவரின் இந்த தைரியமான செயலை பாராட்டி பல பிரபலங்களும் தங்களது ஆதரவுகளை தற்போது ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் சாத்தான்குளம் பிரச்சினையை பற்றி டுவிட்டரில் நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டார். இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டவரை விடவே கூடாது ஞாயம் கிடைத்தே ஆகவேண்டும் என்று ஆவேசமாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் சாத்தான்குளம் பிரச்சனை பற்றி பதிவிடுவதற்காகவே ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இவர் இந்த பிரச்சினைக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளையும் மேஜிஸ்டிரேட் பாரதிதாசனையும் தலைமை காவலர் ரேவதியும் பாராட்டி நன்றி கூறி நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/VetriMaaran/status/1278008005804519424

உலக நாயகன் கமல்ஹாசன் இந்தப் பிரச்சினை பற்றி முன்னிருந்தே பேசி வருகிறார். அவர் தற்போது தைரியமாக முன்வந்து சாட்சி சொன்ன தலைமை காவலர் ரேவதியையும், மதுரை கிளை நீதிபதிகளையும், மேஜிஸ்ட்ரேட் பாரதிதாசனையும் பாராட்டி ட்விட் செய்துள்ளார்.

நீதி வெல்வதற்காக நெஞ்சில் துணிவோடு சாட்சி சொன்ன தலைமை காவலர் ரேவதிக்கு எங்கள் மனமார்ந்த நன்றி என்றுஇசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரேவதியை பாராட்டி பதிவிட்டுள்ளார். உன்னுடன் நாங்கள் துணை நிற்கிறோம் என்று அவரும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களைப் போல பல பிரபலங்களும் தாங்களாக முன்வந்து ஃபென்னிஸ் மற்றும் ஜெயராஜ் பிரச்சனையை பற்றி பேசியதுமட்டுமல்லாமல், இந்த பிரச்சனைக்காக தைரியமாக வாக்குமூலம் அளித்த காவலர் ரேவதியுடன் நாங்கள் நிற்கிறோம் என்று அறிக்கை விடுத்துள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus