நடிகர் சூர்யா நடித்து வெளிவருக்கும் “சூரரைப்போற்று” திரைப்படத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
தமிழ் திரைப்படவுலகின் முன்னணி நடிகரான சூர்யா நடித்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘என்ஜிகே’ மற்றும் கே.வி .ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘காப்பான் ‘ஆகிய திரைப்படங்கள் சென்ற வருடம் வெற்றிகரமாக ஓடிய நிலையில், இவரது அடுத்த படம் “சூரரைப்போற்று” சுதாகொங்கர்னாவின் இயக்கத்தில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை சென்சார் போர்டுக்கு படக்குழு அனுப்பி வைத்த நிலையில், இப்படத்திற்கு சென்சார் போர்டு” யூ” சர்டிபிகேட் கொடுத்துள்ளது. மேலும் இந்த படத்தை தணிக்கை செய்த சென்சார் போர்டு, இந்தக் கதையின் கதை கரு மற்றும் இயக்கம் பாராட்டுதற்குரியதாக இருந்தது என்றும், சூர்யாவின் நடிப்புத் திறமை இந்தப்படத்தின் பலம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மட்டும் ஷிக்யா என்டர்டெயின்மெண்ட் தயாரித்து வெளியிடவுள்ளது. சுதா கொங்கரா ‘ ஏர் டெக்கான்’ உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் கதையை தழுவி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். முன்னேறத் துடிக்கும் ஒரு ஏழை இளைஞனின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
தமிழில்’ 8 தோட்டாக்கள்’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அபர்ணா பாலமுரளி, இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப்படத்தை வெளியிட உரிமம் பெற சில OTT தளங்கள் போட்டியிட்டு வரும் நிலையில், சூர்யா இந்த படம் முதலில் திரையரங்குகளில் மட்டுமே வெளிவரும், பின்பு OTT தளங்களுக்கு தரப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.