“சக்ரா” படத்தின் ட்ரைலர் வெளியீடு!

  • June 28, 2020 / 07:25 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஷால் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சக்ரா”. இந்தப் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குனரான எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே ஆகிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

யுவன்சங்கர்ராஜா இசையில் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த இரண்டு நிமிட அளவு உள்ள ட்ரைலரின் மூலம் இந்த படம் ஒரு திரில்லர் கதை என்றும், இதில் விஷால் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவலர்களாக நடித்துள்ளார்கள் என்றும், சுதந்திர தினத்தன்று நடக்கும் கொள்ளை சம்பவத்தை துப்பறியும் காவலர்களாக இவர்கள் நடித்துள்ளார்கள் என்றும் தெரிகிறது.

மே 1 அன்று வெளியாகவிருந்த இந்த திரைப்படம் லாக்டவுன் காரணத்தால் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழில் இந்த ட்ரைலரை நடிகர் கார்த்தி மற்றும் ஆர்யா வெளியிட்டுள்ளார்கள். தெலுங்கில் நடிகர் ராணா டகுபதியும், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும், கன்னடத்தில் நடிகர் யாஷும் இந்த படத்தின் டிரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளார்கள்.இந்த படத்தின் டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus