நடிகை சார்மிக்கு இயக்குனர் புரி ஜெகன்னாத் ஸ்பெஷலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை சார்மியும் டோலிவுட் இயக்குனர் புரி ஜெகன்னாத்தும் காதலிப்பதாக பல்வேறு வதந்திகள் உலவுகின்றன. ஆனால் அதுபற்றி இருவரும் உறுதி செய்யவில்லை. புரி ஜெகன்னாத்துக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. அப்போதும் சார்மியுடன் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். தற்போது புரி ஜெகநாத் பட நிறுவனங்களில் சார்மி பார்ட்னராக இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார். சார்மியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறியிருக்கும் புரி அவரது உறுதியை பாராட்டியிருக்கிறார்.
அவர் கூறும்போது,”மை ஐ ஸ்மார்ட் பைட்டர் சாமிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உன்னுடைய வாழ்க்கை பயணம் எளிதாக இருக்கவில்லை.ஆனால் நீ எவ்வளவு உறுதியானவர் என்று எனக்குத் தெரியும். நாம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க வேண்டும். நீ என்னைப் பெருமைப் படுத்தியிருக்கிறாய். உண்மையான பலம் நீதான். உன்னுடைய வெற்றிகள் தொடரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.