நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கவுள்ளார்.
இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “செல்லமா” பாடலின் லிரிக் வீடியோவை இந்தத் திரைப்படக் குழு வெளியிட்டுள்ளது.
இந்த செல்லம்மா பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இந்த பாடலை பாடியிருக்கிறார்கள்.
— Anirudh Ravichander (@anirudhofficial) July 16, 2020
“டாக்டர்” திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் வினை வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது வெளியாகியுள்ள செல்லமா சிங்கிள் வெளியான சில நிமிடங்களிலேயே சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
Attachments area