சூர்யாவுக்கு பதிலாக நடித்த சேரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • January 18, 2023 / 12:57 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 2’ மற்றும் இயக்குநர் சிவா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் சிவா இயக்கும் படம் சூர்யாவின் கேரியரில் 42-வது படமாம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூர்யா நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

2004-யில் ரிலீஸான தமிழ் படம் ‘ஆட்டோகிராஃப்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சேரன் இயக்கி, ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் சேரன் சூர்யாவை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் சூர்யாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus