‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த சேரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • January 17, 2023 / 09:23 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது. இந்த படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் விஜய்யின் கேரியரில் 67-வது படமாம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

2004-யில் ரிலீஸான தமிழ் படம் ‘ஆட்டோகிராஃப்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சேரன் இயக்கி, ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் சேரன் ‘தளபதி’ விஜய்யை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் விஜய்யால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus