நடிகர் விஜய்யை பாராட்டிய இயக்குனர் சேரன்!

  • June 26, 2020 / 03:12 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், 1992 ஆம் ஆண்டு ஹீரோவாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கி, இன்று பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்‌.

இவரை வைத்து படம் இயக்க அனைத்து முன்னணி இயக்குனர்களும் வரிசை கட்டி நிற்கிறார்கள் இப்போது. சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இணையதளம் களைகட்டியிருந்தது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் விதவிதமான முறையில் இவருக்கு வாழ்த்துக்களைப் தெரிவித்திருந்தார்கள்.

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக விளங்கும் இவரை பற்றி இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் வெளியிட்ட செய்தியில், 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “ஆட்டோகிராப்”. இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் தனக்கு போன் செய்து பாராட்டு தெரிவித்ததாகவும், மேலும் இவருடன் நடிப்பதற்கு ஆவலாக உள்ளார் என்று விஜய் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சேரன் குறிப்பிட்டுள்ளதாவது”விஜய்யிடம் இருந்து வந்த அந்த போன் கால் இன்றும் என்னால் மறக்க முடியாது. “ஆட்டோகிராஃப்” படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார்.அப்போது என்னுடன் வேலை செய்யவும் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அப்போது “தவமாய் தவமிருந்து”படத்தின் வேலைகளில் இருந்ததால், இந்த வாய்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது, நான் இந்த வாய்ப்பை தவமாய் தவமிருந்து இயக்குனரை நினைத்து கைவிட்டேன். ஆனால் அது எனக்கு பெரிய வாய்ப்பு என்பதையும், அதை இழந்ததை நினைத்து இப்பொழுது வருந்துகிறேன்”என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

மேலும் விஜய்யை நேரில் சந்திக் நேர்ந்தால் இதற்காக வருத்தம் தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர்” அவரிடம் ஆட்டோகிராஃப் கதை சொன்ன மூன்று மணிநேரம் மறக்கமுடியாதது. ஒரு அசைவின்றி.. ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்த தன்மை. வாவ்.. கிரேட்.. இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேண்டுமா அண்ணா மட்டும்தான்.. அவ்வளவு டெடிகேஷன். அதுவே அவரது இன்றைய உயரம்! “என்று விஜய்யை பாராட்டி குறிப்பிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து விஜய் நடித்து வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus