Chiranjeevi & Ram Charan : ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய சிரஞ்சீவி & ராம் சரண்!

  • November 15, 2023 / 07:37 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவரின் கடைசி படமான ‘போலா ஷங்கர்’ இந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் மெஹர் ரமேஷ் இயக்கியிருந்தார். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காம்.

இதனைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் 156-வது படத்தை இயக்குநர் வசிஸ்தா இயக்குகிறார். இந்நிலையில், தீபாவளி பார்ட்டியில் சிரஞ்சீவியும், அவரது மகனும், பிரபல நடிகருமான ராம் சரண் இணைந்து ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus