இயக்குனர் பா .ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சார்பட்டா பரம்பரை .இந்த படத்தில் ஆர்யா , பசுபதி , ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . திரையரங்கில் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படம் அமேசான் ஓடிடி -யில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது .
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகான் . இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் . பாபி சிம்ஹா , சிம்ரன் , துருவ் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் .மகான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார் . கே.ஜி.எஃப் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறது . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது . அக்டோபர் 18ஆம் தேதி கடப்பாவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது . தொடர்ந்து 15 நாட்கள் ஆந்திராவிலும் , அடுத்த கட்ட படப்பிடிப்பை மதுரையிலும் நடத்த படக்குழு திட்டம் என்ற செய்தி வெளியாகியுள்ளது .
மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது .ஆனால் தற்போது ராஷ்மிகா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் மாஸ்டர் , மாறன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது .