Chiyaan Vikram 62 : ‘சீயான்’ விக்ரமின் 62-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ!

  • October 28, 2023 / 08:33 PM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாகத்தை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

‘தங்கலான்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்குகிறாராம். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 26-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ‘சீயான்’ விக்ரமின் 62-வது படத்தை ‘சேதுபதி’ புகழ் இயக்குநர் SU.அருண் குமார் இயக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை விக்ரமே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்ததுடன், அறிவிப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அருண் குமார், சித்தார்த்தை வைத்து இயக்கிய ‘சித்தா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus