விரைவில் வெளியாகவுள்ள சியானின் கோப்ரா திரைப்படம்!

  • August 31, 2020 / 07:56 PM IST

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “கோப்ரா”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்த படம் லாக்டவுன் முடிந்ததும் வெளியிடப்படும் என்று திரைப்படக் குழு தெரிவித்திருந்தது.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்யாவில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் முடிந்ததும் படத்திற்கான மீதமுள்ள வேலைகள் முடித்து வெளியிடப்படும் என்று திரைப்படக் குழு தெரிவித்திருந்தது.

தற்போது படப்பிடிப்புகள் நடப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்படும் என்றும் மேலும் இந்தப் படம் வருகிற ஏப்ரல்17 2021 ஆம் ஆண்டு நடிகர் சியான் விக்ரம் பிறந்த நாள் அன்று வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் “தும்பி துள்ளல்” என்ற இந்த படத்தின் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
விரைவில் வெளியாகவுள்ள சியானின் கோப்ரா திரைப்படம்!

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus