ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் ‘RC15’… ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாளை கொண்டாடிய நடன இயக்குநர்!

  • November 30, 2022 / 09:54 AM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் புதிய படத்தில் டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடித்து வருகிறார். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம்.

இதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம். இது தயாரிப்பு நிறுவனம் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’-யின் 50-வது படைப்பாம். இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அஞ்சலி, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைத்து வரும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது, இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை நியூசிலாந்தில் படமாக்கி வருகின்றனர். இந்நிலையில், கடந்த நவம்பர் 27-ஆம் தேதி இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து நடன இயக்குநர் போஸ்கோ மார்டிஸின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus