சிவகார்த்திகேயன் – சூரி இணைந்து நடிக்கும் ‘டான்’… சூப்பரான அப்டேட் கொடுத்த இயக்குநர் சிபி!

  • November 3, 2021 / 11:27 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’, ‘டான்’, ‘சிங்கப்பாதை’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், RJ விஜய், ஷிவாங்கி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. தற்போது, நடிகர் சூரி இப்படத்துக்கான டப்பிங் பணியை முடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இயக்குநர் சிபி சக்கரவர்த்தியே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus