இயக்குனர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் என்று அழைக்கப்படும் கண்ணன் சென்னையில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் காலமானார்.
பாரதிராஜாவின்’ நிழல்கள்’ தொடங்கி கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘பொம்மலாட்டம்’ திரைப்படம் வரை அவரின் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கண்ணன். பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரான இவர் சென்ற வாரம் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இது இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆயினும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார்.
மூத்த எடிட்டர் லெனின் சகோதரரான இவர், 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்து இருப்பார். அதில் 40 படங்கள் இயக்குனர் பாரதிராஜாவின் படங்களாக இருக்கும். இவர் இயக்குனர் பீம்சிங் அவரின் மகனாவார். அலைகள் ஓய்வதில்லை டிக் டிக் டிக் மண்வாசனை புதுமை பெண் முதல் மரியாதை ஒரு கைதியின் டைரி கடலோர கவிதைகள் கிழக்கு சீமையிலே கருத்தம்மா போன்ற பல பாரதிராஜாவின் படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இவர் கடந்த சில வருடங்களாக BOFTA பிலிம் இன்ஸ்டியூடில், ஒளிப்பதிவு பிரிவு தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த செல் இன்ஸ்டியூட்டில் உரிமையாளர் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் இவரை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்து ,இவரின் இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரது மனைவி பெயர் காஞ்சனா ,இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளார்கள். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணத்திற்கு அனைத்து திரையுலக பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.