எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் ‘விஜய் 65’… இது ‘குஷி’ படத்தின் பார்ட் 2-வா?
November 25, 2020 / 07:07 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். படம் பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது என கடந்த சில மாதங்களாக தகவல் வந்த வண்ணமிருந்தது. இப்படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடியாம். இதில் விஜய்க்கு ரூ.70 கோடியும், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.10 கோடியும் சம்பளம் பேசப்பட்டிருந்தது. இப்படத்தில் விஜய் ஹீரோ, வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறார் என்று சொல்லப்பட்டது.
இதன் ஷூட்டிங்கை வருகிற ஜனவரி 20-ஆம் தேதி ஆரம்பிக்கவும், படத்தை 2021 தீபாவளிக்கு வெளியிடவும் ப்ளான் போடப்பட்டிருந்தது. பின், திடீரென இந்த படத்தில் இருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார். அதன் பிறகு இப்படத்தினை இயக்குநர் நெல்சன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. கடந்த சில நாட்களாக, இப்படத்தினை விஜய்யை வைத்து ‘குஷி’ படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்க உள்ளதாகவும், இது ‘குஷி’ படத்தின் பார்ட் 2 என்றும் கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்த போது “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளனர்.