கோப்ரா படம் எப்பொழுது வெளியாகும் ?

  • May 17, 2022 / 01:07 PM IST

2015-ஆம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி . இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் இமைக்கா நொடிகள் . நயன்தாரா , அதர்வா , அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து கோப்ரா என்கிற படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து.

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார் . ஸ்ரீநிதி , மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . ஏ .ஆர் . ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்த படத்திலிருந்து வெளியான தும்பி , தும்பி பாடலும் அதீரா என்கிற பாடலும் நல்ல வரவேற்பை தந்தது . முன்னதாக இந்த படத்தின் டீசர் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியாகி இருந்தது . அதன் பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது .

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது நடந்து வருகிறது . இந்நிலையில் கோப்ரா படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரம் நடித்த படம் திரைக்கு வர இருக்கிறது இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus