கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

  • June 26, 2020 / 08:34 PM IST

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்த படம் லாக்டவுன் முடிந்ததும் வெளியிடப்படும் என்று திரைப்படக் குழு தெரிவித்திருந்தது.

இந்தப் படத்தைப் பற்றிய அப்டேட்காக அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதை தொடர்ந்து இந்த படத்திற்கான மியூசிக் அப்டேட் விரைவில் வரும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித்குமார் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

அதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது” தும்பி துள்ளல்” என்ற இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகிற ஜூன் 29ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்யாவில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் முடிந்ததும் படத்திற்கான மீதமுள்ள வேலைகள் முடித்து வெளியிடப்படும் என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus