கோப்ரா திரைப்படத்தின் அப்டேட்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

  • November 6, 2020 / 09:23 PM IST

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “கோப்ரா”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்த படம் லாக்டவுன் முடிந்ததும் இதர வேலைகள் தொடங்கும் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்யாவில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டது.

இதனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு ஓரளவு நிறைவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியதாக திரைப்படக்குழு அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் ஸ்பெஷல் வீடியோ வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என்பது போல ஒரு ஹின்ட் கொடுத்துள்ளார் அஜய் ஞானமுத்து. இதனால் படு குஷியில் இருக்கிறார்கள் விக்ரம் ரசிகர்கள். இது என்ன அப்டேட் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus