கோப்ரா தயாரிப்பாளர் சிறுமி சஹானாவுக்கு அளித்த பரிசு!

  • July 3, 2020 / 04:20 PM IST

சமீபத்தில் இணையதளத்தில் “கோப்ரா”திரைப்படத்தில் வரும் “தும்பி துள்ளல்” பாடலை பார்வையற்ற சிறுமி சஹானா வாசித்தது வைரலாகி வந்தது.

இந்த பாடலை கேட்ட இந்த பாடலின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சிறுமி சஹானாவை பாராட்டி “சிவீட்” என்று பதிவிட்டிருந்தார்.இது நேற்று இணையதளத்தில் வைரலாகியது.

இதைத்தொடர்ந்து ‘தும்பி துள்ளல்’ பாடல் இடம்பெற்ற “கோப்ரா” படத்தின் தயாரிப்பாளர்
லலித் குமார் சஹானாவை பாராட்டி சோலோ ஸ்டுடியோ பன்டில் ஒன்றை பரிசளித்துள்ளார்.

இந்த வீடியோ 4 லட்சம் வீயூஸ் வரை தற்போது பெற்றுள்ளது.அனைவரும் பாராட்டி கமென்ட் செய்து, அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “கோப்ரா”.ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகளை புவன்ஸ்ரீனிவாசன் எடிட் செய்துள்ளார்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மே மாதம் வெளியிடவிருந்த இந்த திரைப்படம் லாக்டவுன் காரணமாக தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus