கோப்ரா டிரைலர் எப்போது வெளியாகும் ?

  • August 17, 2022 / 01:39 PM IST

2015-ஆம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி . இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் இமைக்கா நொடிகள் . நயன்தாரா , அதர்வா , அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து கோப்ரா என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார் அஜய் ஞானமுத்து.


கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் நடித்து இருக்கிறார் . ஸ்ரீநிதி , மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . ஏ .ஆர் . ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்த படத்திலிருந்து வெளியான தும்பி , தும்பி பாடலும் அதீரா என்கிற பாடலும், சமீபத்தில் வெளியான உயிர் உருகுதே பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது . முன்னதாக இந்த படத்தின் டீசர் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியாகி இருந்தது . அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர் ,

இந்நிலையில் கோப்ரா படத்தின் ஆடியோ ரிலீஸ் ஜூலை 11-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு பிரபல மாலில்
நடைபெற்றது .தற்போது இப்படத்தின் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் திட்டமிட்டபடி பணிகள் முடியாமல்
இருந்தது அதனால் கோப்ரா படம் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது .


இந்நிலையில் தற்போது கோப்ரா படத்தின் டிரைலர் பற்றின தகவல் வெளியாகி உள்ளது . இந்த வார இறுதியில் கோப்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus