அடேங்கப்பா ….”காபி வித் காதல் ” செய்த வசூல் இத்தனை கோடியா ?

  • November 18, 2022 / 12:01 PM IST

முறை மாமன் , முறை மாப்பிள்ளை , உள்ளத்தை அள்ளித்தா , அருனாச்சாலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி .இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அரண்மனை 3. இந்த படத்தை தொடர்ந்து ஜெய் , ஜிவா, மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை‌ வைத்து காபி வித் காதல் படத்தை இயக்கி உள்ளார் . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ,நடிகை மாளவிகா , ஐஸ்வர்யா , , திவ்யதர்ஷினி, யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா சண்முகம் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர் . பொதுவாக சுந்தர்.சி படம் கலகலப்பாக நகைச்சுவையுடன் இருக்கும் . ஆனால் இந்த படத்தின் தலைப்பே ‌”காபி வித் காதல் ” என்று சற்று வித்தியாசமாக உள்ளது . அதனால் இந்த படத்தில் காதலுக்கும் பஞ்சம் இருக்காது என்று நம்பப்படுகிறது .

இந்நிலையில் தற்போது படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . வெளியான முதல் 14 நாளில் இந்த காபி வித் காதல் படம் 3.78 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus